நாகர்கோவிலில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடப்பதாக வடசேரி போலீசுக்கு நேற்றுத் தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் ஒரு வாலிபரும், பெண்ணும் அறை குறை ஆடையுடன் இருந்தனர். இதைக் தொடர்ந்து வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சிதறால் பகுதியை சேர்ந்த ஆஷிக் (வயது 22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் விபசாரத்திற்கு அறை கொடுத்ததாக லாட்ஜ் மேலாளர் சிவசக்கரவர்த்தி (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ப்ரோக்கராக செயல்பட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
கருத்துரையிடுக