அடுத்த 3 வருஷத்துக்கு ரொம்ப பிஸி தான்.. தனுஷ் கையில் இருக்கும் டஜன் கணக்கான படங்கள்.. அதுல 3 பார்ட் 2 படங்களும் இருக்கு..!


தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். அவருடைய குபேரா திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தவிர்த்து எட்டு படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. எனவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தனுஷ் தொடர்ந்து படங்களில் நடித்த பிசியாக இருப்பார் என தெரிகிறது. இதில் முதலாவதாக தனுஷே இயக்கி நடிக்க உள்ள திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தின் படபிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.






அடுத்து அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் திரைத்துறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். பிறகு சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து தனுசு உடன் கூட்டணி போட உள்ளார். அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்து இருந்த வடசென்னை 2 திரைப்படமும் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக சமீபத்தில் தனுஷ் அறிவித்தார்.



வெற்றி கூட்டணியான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் மீண்டும் வடசென்னை 2 திரைப்படம் மூலமாக இணைய உள்ளனர். இந்தப் படங்களைத் தவிர இன்னும் இரண்டு பார்ட் 2 திரைப்படங்களும் தனுஷ் கைவசம் உள்ளது. அதாவது செல்வராகவனின் புதுப்பேட்டை 2 திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். அதனைப் போலவே கார்த்தியை வைத்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில் அதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தனுஷ் டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக உள்ளார்.


Post a Comment

புதியது பழையவை