மண்டைக்காடு கோயிலில் ரூ. 11 லட்சம் காணிக்கை வசூல்



கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9

 நிரந்தர உண்டியல் மற்றும் 6 குடங்கள் ஆகியன செப்டம்பர் மாதம் 27ம் தேதிக்கு பிறகு இன்று கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் சேர்மன் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் சண்முகம் பிள்ளை, ஆய்வாளர் செல்வி, கோயில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார் மற்றும் கோயில் ஊழியர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. 


இதில் ரூ. 11, 18, 030 ரொக்கமாகவும், 14 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி மற்றும் கன்னடா 5 டாலர், ரோமன் 2 ரியால், யு. ஏ. இ. 5 திர்காம் ஆகிய வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

Post a Comment

புதியது பழையவை