கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரணியல் அருகே புதுக்குளம் உள்ளது. இந்தக்குளம் தற்போது மழையின் காரணமாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை இந்த குளத்தில் இதே பகுதியை சார்ந்த வெல்டர் ராமகிருஷ்ணன் என்பவர் மது போதையில் இறங்கி குளித்துள்ளார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் குளிக்க வேண்டும் வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய திறமையை காட்டுவதாக நினைத்து சாகசம் செய்வது போல் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார். அப்படி தொடர்ந்து நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணனை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ளவர்கள். ,
குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து 12 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒன்றரை மணி நேரம் குளத்தில் தேடி ராமகிருஷ்ணனின் உடலை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இரணியல் போலீசார் உடலை உடற்கூறுஆய்விக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துரையிடுக