கன்னியாகுமரியில் 2-வது நாளாக படகு போக்குவரத்து ரத்து.



கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

 இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு படகில் பயணம் செய்வதற்காக படகுத்துறை நுழைவு வாயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். 

ஆனால் நேற்று கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதாலும், கடல் சீற்றமாக இருந்ததாலும் நேற்று 2-வது நாளாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

 இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Post a Comment

புதியது பழையவை