அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்- கணவர் ரெடினுடன் எடுத்த போட்டோ போட்டு சங்கீதா அழகிய பதிவு

 தமிழ் சினிமாவில் இப்போது பிஸியாக நடித்துவரும் காமெடி நடிகர்களில் ஒருவராக உள்ளார் ரெடின் கிங்ஸ்லி.

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் அவரது திரைப்பயணம் அமோகமாக தொடங்க அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.





சமீபத்தில் மைசூர் படப்பிடிப்பிற்கு சென்ற இவர் அங்கேயே தான் காதலித்து வந்த சீரியல் நடிகை சங்கீதாவை சிம்பிளான முறையில் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தார்கள்.


சங்கீதா போஸ்ட்

திருமணம் ஆன நாளில் இருந்து கணவருடன் எடுக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வந்த சங்கீதா சமீபத்திலும் ஒரு அழகான போட்டோ பதிவிட்டு, என் ஆன்மாவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட காத்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.  


Post a Comment

புதியது பழையவை