கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடைக்கோடு புல்லத்தேரியை சேர்ந்தவர்
கோபாலகிருஷ்ணன் (55) , துணி வியாபாரி இவரது ஒரே மகள் ரோகினி (27), இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்தார், இந்த மாதம் அவரது மருத்துவ படிப்பை நிறைவு செய்துவிட்டு சொந்த ஊருக்கு வருவதாக இருந்தது, இது குறித்து அவரது வீட்டிற்கு ரோகிணி தகவல் தெரிவித்து இருந்தார், இந் நிலையில் கடந்த வாரம் ரோகிணி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வீட்டாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் செய்வதறியாத திகைத்து நின்றனர். இந் நிலையில் கடந்த 13-ஆம் தேதி ரோகிணி இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது, இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதனை அடுத்து மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர், தமிழக அரசு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ரோகிணி உடலை கொண்டு வர இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது,
மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாணவியின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
கருத்துரையிடுக