பிள்ளைத்தோப்பில் பெண்ணின் பிணம் தோண்டியெடுப்பு


வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் வளன் அரசு (45). இவர் வீட்டுப்பக்கம் சாலையோரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர்த்தொட்டி  அமைத்துள்ளார். 

இந்த தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடம் பிள்ளைத்தோப்பு ஊருக்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இதனால் பங்கு பேரவை நிர்வாகிகள் தொட்டியை  மூட வளன் அரசுவிடம் வலியுறுத்தி வந்தனர். 

இது தொடர்பாக அவர்களிடையே சுமூக முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வளன் அரசின் உறவினர் வின்சென்ட் நகரை சேர்ந்த  ஜெகன் மனைவி ரேவிதா (45). உடல் நலக்குறைவினால் திடீரென இறந்து போனார். பிள்ளைத்தோப்பில் உடலை அடக்கம் செய்ய வலியுறுத்தி வளன் அரசு  வீட்டு முன்பு உள்ள சாலையில் உறவினர்கள்  மறியலில் ஈடுப்பட்டனர.

 அங்கு அருகில் வளனார் நகரில் உள்ள உறவினர் ஓருவரின் தோப்பில்
ரேவிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரேவிதாவின் கணவர் ஜெகன் தனியார் நிலத்தில் அடக்கம் செய்யப்பட்ட ரேவிதாவின் உடலை ஊர் மயானத்தில் அடக்கம் செய்யக்கேட்டு மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை பரிசீலித்த உயர்நீதி மன்றம் உடலை தனியார் நிலத்திலிருந்து தோண்டி எடுத்து பிள்ளைத்தோப்பு ஊர் மயானத்தில் அடக்கம் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது.

 இதையடுத்து இன்று காலை  நாகர்கோவில் ஆர். டி. ஓ. முன்னிலையில் ரேவிதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஊர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Post a Comment

புதியது பழையவை