மத்திய அரசு தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) நடத்தி வருகிறது. இந்த தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு பிளஸ் டூ வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது.
இந்த தேர்வில் கிள்ளியூர் தொகுதி, அம்சி உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர் ஆர்யா, மாணவி தர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவர், மாணவியை பள்ளி தாளாளர் அம்சி முகுந்தன் நாயர், தலைமை ஆசிரியை லட்சுமி ஸ்ரீ, ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

கருத்துரையிடுக