வெள்ளிசந்தை அருகே மணவிளையை சேர்ந்தவர் சுரேஷ் குமார் என்று அட்டுமணி (41). டெம்போ டிரைவர். சம்பவ தினம் இவர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவி பரதநாட்டிய வகுப்புக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்.
மாணவி அருகே வந்ததும் அட்டுமணி மாணவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ந்த மாணவி அங்கிருந்து வீட்டுக்கு ஓடி சென்று தன் தாயிடம் நடந்ததை கூறினார். இது குறித்த மாணவியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அட்டுமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கருத்துரையிடுக