குளச்சலில் சித்தப்பாவால் பிளஸ் டூ மாணவி கர்ப்பம்



குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் மனைவியுடன் திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் இருந்து வந்தார். இவரது மனைவியின் அக்கா வீடு மண்டைக்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலையில் மனைவியின் அக்காவின், பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.



சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர்கள் பரிசோதித்து சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்

தலைமறைவாகி விட்டார்.

Post a Comment

புதியது பழையவை