கனமழை- கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலமாக தொடர் மழையும், கனமழையும், விட்டுவிட்டு மழையும் பெய்து வந்தது இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான

 பேச்சுப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகள் நீர்மட்டம் நிரம்பி வந்தது , இதனால் ஆறு மற்றும் குளங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந் நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்யவில்லை, ஆனால் நேற்று காலை முதல் மழை மலையோர கிராமங்கள் மற்றும் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது.

 இந்நிலையில் நேற்று இரவு முதல் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. 

இதனால் அனணைகள் , ஆறு, ஏரி, குளகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால்,

 குழித்துறை தாமிரபரணி ஆறு உட்பட ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க பொதுப்பணித்துறையினர் தண்டோரா கொட்டி அறிவுறுத்தி வருகின்றனர்

Post a Comment

புதியது பழையவை